மேலும் செய்திகள்
அடையாளம் தெரியாத நபர் பலி
25-Nov-2024
புன்செய்புளியம்பட்டி, டிச. 19-புஞ்சைபுளியம்பட்டி, பவானிசாகர் சாலையில் வடக்கு காந்திபுரம் அருகே, இரு டாஸ்மாக் கடைகள் செயல்படுகின்றன. டாஸ்மாக் கடை முன்புறமுள்ள, சந்து ஒன்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடந்துள்ளது. புன்செய் புளியம்பட்டி போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'இறந்து கிடந்தவருக்கு, 50 வயது இருக்கும். வாயில் நுரை தள்ளியவாறு இறந்துள்ளார். உடலில் காயங்கள் இல்லை. ப்ளூ கலர் லுங்கி, வயலட் கலர் சட்டை அணிந்து இருந்தார். இறந்து இரண்டு நாட்களுக்கு மேல் இருக்கலாம்,' என்றனர்.
25-Nov-2024