உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அழைக்காத அண்ணன் தம்பி விபரீத முடிவு

அழைக்காத அண்ணன் தம்பி விபரீத முடிவு

ஈரோடு, ஈரோடு, நாடார்மேடு, கெட்டி நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி, 57; மது குடிக்கும் பழக்கம் கொண்டவர். தாய், மனைவி, மகனுடன் வசித்தார். சகோதரர் வீட்டு விசேஷத்துக்கு அழைக்காததால் மன வருத்தத்தில் இருந்தார்.இது தொடர்பாக மனைவியிடம் தகராறு செய்துள்ளார். இதனால் மேலும் மனவேதனை அடைந்தவர், படுக்கை அறையில் கயிற்றால் துாக்கிட்டு கொண்டார்.அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மனைவி மீட்டு, பெருந்துறை மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். மருத்துவ பரிசோதனையில் சுப்பிரமணி ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ