உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மத்திய அமைச்சர் முருகன் பண்ணாரி கோவிலில் தரிசனம்

மத்திய அமைச்சர் முருகன் பண்ணாரி கோவிலில் தரிசனம்

சத்தியமங்கலம், சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரி மாரியம்மன் கோவிலுக்கு, மத்திய இணை அமைச்சர் முருகன் நேற்று மதியம், தரிசனம் செய்ய வந்தார். தரிசனம் செய்து விட்டு அவர் கூறியதாவது: தி.மு.க., ஆட்சி பெயிலியர் மாடல் ஆட்சி. இந்த ஆட்சியால் எந்த பிரயோஜனமும் இல்லை. கடந்த நான்கரை ஆண்டுகளாக மக்கள் பெரிதும் துன்பப்பட்டு வருகின்றனர். சொத்து வரி, பத்திர பதிவுக்கு அதிக கட்டணம் உள்ளிட்ட பல வரிகளை உயர்த்தி மக்கள் தலையில் பேரிடியை இறக்கியுள்ளது. கிராமங்களில் கஞ்சா, சாராயம், போதை பொருட்கள் பரவி கிடைக்கிறது. இவ்வாறு கூறினார். 'பயிர் கடனுக்கு சிபில் ஸ்கோர் கேட்பதால், விவசாயிகள் சிரமத்துக்கு ஆளாகின்றனரே' என்று நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, 'இதுபற்றி மத்திய நிதி அமைச்சரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை