உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / காதலர் தினம்; கொடிவேரி தடுப்பணை வெறிச்

காதலர் தினம்; கொடிவேரி தடுப்பணை வெறிச்

கோபி: குறைந்த காதலர்களே வருகை தந்ததால், கொடிவேரி தடுப்பணை வளாகம் நேற்று வெறிச்சோடி காணப்பட்டது.ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர், கோபி அருகே கொடிவேரி தடுப்பணை வழியாக, பவானி ஆற்றில் அருவியாக கொட்டுகிறது. இதனால், குளிக்கும் வசதி எளிது என்பதால், தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்கின்றனர். நேற்று காதலர் தினம் கொண்டாடப்பட்டது.வழக்கமாக காதலர் தினத்தன்று, காதலர்கள் முக்கிய சுற்றுலா தலங்களில் வட்டமிடுவர். ஆனால், கொடிவேரி தடுப்பணை வளாகம் மற்றும் சிறுவர் பூங்காவில், காதல் ஜோடிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருந்தது. மேலும் பரிசல் துறையிலும் காதல் ஜோடிகளின் வருகை குறைந்திருந்தது. இதனால், கொடிவேரி தடுப்பணை வளாகம் வெறிச்சோடி காணப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை