மேலும் செய்திகள்
டாஸ்மாக் கடையை இடம் மாற்ற கோரி கடையடைப்பு
24-Sep-2025
ஈரோடு, ஈரோடு கனிராவுத்தர் குளம் பகுதியில், 3527 என்ற எண் கொண்ட டாஸ்மாக் கடை பாருடன் செயல்படுகிறது. கடையால் இடையூறு ஏற்படுவதால், இடமாற்றம் செய்யக்கோரி அப்பகுதி மக்கள் பலமுறை புகார் தெரிவித்து வந்தனர். ஆனால் கடையை மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், நேற்று வி.சி. கட்சி, சமூகநீதி கட்சி, விடுதலை புலிகள் கட்சி, இஸ்லாமிய ஜனநாயக பேரவை, விடுதலை வேங்கை கட்சி உள்பட பல்வேறு அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில், டாஸ்மாக் கடை முன் அமர்ந்து வி.சி. மாவட்ட செயலர் சாதிக் தலைமையில் தர்ணா போராட்டம் நடந்தது,ஈரோடு தாசில்தார் முத்துகிருஷ்ணன், டாஸ்மாக் மேலாளர் குணசேகரன், டவுன் டி.எஸ்.பி., முத்துகுமாரன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் வரும், 30ம் தேதிக்குள் கடை மாற்ற நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.
24-Sep-2025