உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / காய்கறி விலை கடும் சரிவு

காய்கறி விலை கடும் சரிவு

ஈரோடு:ஈரோடு தினசரி மார்க்கெட்டில் காய்கறி விலை நேற்று வெகுவாக குறைந்தது. ஈரோடு வ.உ.சி. பூங்கா தினசரி காய்கறி மார்க்கெட்டுக்கு சில தினங்களாக காய்கறி வரத்து அதிகரித்துள்ளது. இதன் எதிரொலியாக காய்கறிகள் விலை நேற்று குறைந்தது. குறிப்பாக, கேரட், பீன்ஸ், பீட்ரூட், அவரை விலை குறைந்தது.காய்கறிகளின் விலை விபரம் (கிலோ-ரூபாய்): கத்திரிக்காய்--30, வெண்டைக்காய்-30, புடலங்காய்-40, பாவற்காய்-45, சுரைக்காய்-40, பீர்க்கங்காய்-60, முருங்கைக்காய்-70, முள்ளங்கி-30, கோவக்காய்-50, சவ்சவ்-30, தேங்காய் - 40, கேரட்-60, பீட்ரூட்-40, பீன்ஸ்-70, இஞ்சி-90, மிளகாய்-70, தக்காளி-20, காலிபிளவர்-25, முட்டைகோஸ்-25, ஊட்டி உருளை-45, சின்ன வெங்காயம் - 30, பெரிய வெங்காயம்-30, கருப்பு அவரை-70க்கு விற்றது. மாவட்டத்தில் உள்ள ஆறு உழவர் சந்தைகளுக்கு, 79.46 டன் காய்கறி நேற்று வரத்தாகி விற்றது. இதன் மதிப்பு, 29.94 லட்சம் ரூபாய்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ