உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / குளம், சுடுகாட்டை சொந்தம் கொண்டாடும் கிராமம் இரண்டு கிராம மக்கள் கலெக்டரிடம் முறையீடு

குளம், சுடுகாட்டை சொந்தம் கொண்டாடும் கிராமம் இரண்டு கிராம மக்கள் கலெக்டரிடம் முறையீடு

ஈரோடு, கொடுமுடி அருகே சோழக்கிராய்மேடு, சின்னபனைபுதுார் பகுதி கிராம மக்கள், கலெக்டர் அலுவலகத்தில், நேற்று மனு வழங்கி கூறியதாவது:கொந்தளம் கிராமத்துக்கு உட்பட்ட சோழக்கிராய்மேடு, சின்னபனைபுதுார், கல்லாபுரங்கோட்டை அருகே, 2.5 ஏக்கரில் குளம், அதன் அருகே சுடுகாடும் உள்ளது. இவை இரண்டும், சோழக்கிராய்மேடு, சின்னபனைபுதுார், கல்லாபுரங்கோட்டை ஊர்களுக்கு பொதுவானது. தற்போது குளம் மற்றும் சுடுகாட்டை கல்லாபுரங்கோட்டைக்கு மட்டும் சொந்தமானது என குறிப்பிட்டு சிலர் உரிமை கொண்டாடுகின்றனர். அங்கு தென்னை, மரக்கன்று நட்டு எங்கள் பகுதிக்கு வரும் காவிரி குடிநீரையும் பாய்ச்சுகின்றனர். குளத்தில் மீன்பிடிக்க எங்கள் பகுதியினர் சென்றால் வரக்கூடாது என்றும் மிரட்டுகின்றனர். இது சமூக ரீதியிலான பிரச்னையாக மாறி வருகிறது. கொடுமுடி போலீஸில் புகார் செய்து விசாரித்தாலும், நடவடிக்கை இல்லை. மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, மூன்று கிராமங்களுக்கும் குளம், சுடுகாடு பொதுவானது என்பதை உறுதிப்படுத்த வேண்டும். இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ