உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பணித்தள பொறுப்பாளரை கண்டித்துவிண்ணப்பள்ளி பஞ்., ஆபீஸ் முற்றுகை

பணித்தள பொறுப்பாளரை கண்டித்துவிண்ணப்பள்ளி பஞ்., ஆபீஸ் முற்றுகை

புன்செய்புளியம்பட்டி, புன்செய் புளியம்பட்டி அருகே விண்ணப்பள்ளி பஞ்.,ல் எரப்பநாய்க்கன் பாளையம், சாணார்பதி, சாத்தனுார் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த, 500க்கும் மேற்பட்டோர், நுாறு நாள் வேலை திட்டத்தில் வேலை செய்கின்றனர்.தங்களுக்கு முறையாக வேலை வழங்குவதில்லை என்று கூறி, பணித்தள பொறுப்பாளர் மதியை கண்டித்து, 200க்கும் மேற்பட்டோர் விண்ணப்பள்ளி பஞ்., அலுவலகத்தை நேற்று காலை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொழிலாளர்களிடம் ஊரக வளர்சித்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.இதுகுறித்து மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துகிருஷ்ணன் கூறுகையில், ''நுாறு நாள் வேலை திட்ட தொழிலாளர்கள், இரு பிரிவாக புகார் தெரிவிக்கின்றனர். ஒரு வாரம் வேலையை நிறுத்தி இரு பிரிவினரை அழைத்து பேசி தீர்வு காணப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ