உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / நீர் நிலையை துாய்மைப்படுத்தும் நிகழ்ச்சி

நீர் நிலையை துாய்மைப்படுத்தும் நிகழ்ச்சி

ஈரோடு:ஈரோடு மாநகராட்சி சார்பில், நீர் நிலைகளை தூய்மைப்படுத்துதல் மற்றும் மரம் நடுதல் விழா கனிராவுத்தர் குளத்தில் நேற்று நடந்தது. மேயர் நாகரத்தினம் தொடங்கி வைத்தார். தன்னார்வலர்கள், கல்லுாரி மாணவ, மாணவியர் என பலர், கனிராவுத்தர் குளத்தில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான குளத்தில் துாய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். குளத்தை சுற்றி, 50க்கும் மேற்பட்ட நாட்டு மரக்கன்று நட்டனர். நிகழ்ச்சியில் துணை மேயர் செல்வராஜ், கமிஷனர் அர்பித் ஜெயின், துணை கமிஷனர் தனலட்சுமி மற்றும் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை