மேலும் செய்திகள்
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
18-Nov-2024
பவானிசாகர் நீர்வரத்து அதிகரிப்பு
06-Nov-2024
1,000 கன அடியாக குறைப்பு புன்செய் புளியம்பட்டி: பாசன பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளதால், பவானி-சாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு திறந்து விடப்படும் நீரின் அளவு, 2,300 கன அடியில் இருந்து, 1,000 கன அடியாக குறைக்-கப்பட்டுள்ளது.ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணை, 105 அடி உயரம்; 32.8 டி.எம்.சி., கொள்ளளவு கொண்டது. அணையில் இருந்து கீழ்ப-வானி பாசனத்துக்கு, கீழ்பவானி வாய்க்காலில், 2,300 கன அடி நீர் திறக்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் முதல், கீழ்பவானி வாய்க்காலில் நீர் திறப்பு படிப்படியாக குறைக்கப்பட்டு, 1,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது.அதேசமயம், அரக்கன் கோட்டை-தடப்பள்ளி பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. நேற்று மாலை நிலவரப்படி, அணை நீர் மட்டம், 97.37 அடி; நீர் இருப்பு, 26.7 டி.எம்.சி.,யாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு, 1,069 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகு-திகளில் பரவலாக மழை பெய்ததால், பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்திற்கு திறந்து விடப்படும் நீரின் அளவு குறைக்-கப்பட்டுள்ளதாக, நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
18-Nov-2024
06-Nov-2024