உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சீரடி சாய்பாபா பாதுகைக்குபுளியம்பட்டியில் வரவேற்பு

சீரடி சாய்பாபா பாதுகைக்குபுளியம்பட்டியில் வரவேற்பு

பு.புளியம்பட்டி:சீரடியில் இருந்து சாய்பாபாவின் பாதுகை, பல்வேறு மாநிலங்களுக்கு பக்தர்கள் தரிசனத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக புன்செய்புளியம்பட்டி அருகே தென் சீரடி சக்தி சாய்ராம் தர்மஸ்தலாவுக்கு, பாதுகை கொண்டு வரப்பட்டது. சிறப்பு வாகனத்தில் வந்த பாதுகைக்கு நேற்று மாலை, டானா புதுார் முத்து மாரியம்மன் கோவில் அருகே திரளான பக்தர்கள் வரவேற்பு அளித்து, பஜனை பாடியபடி சாரட் வண்டியில் ஊர்வலமாக, தென் சீரடி சக்தி சாய்ராம் தர்ம ஸ்தலத்திற்கு கொண்டு சென்றனர்.அங்கு தரிசனத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி இன்று காலை, 6:30 முதல் இரவு, 9:00 மணி வரை பாதுகை வைக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை