உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தி.மு.க., சார்பில் இன்று முதல் நலத்திட்ட உதவி

தி.மு.க., சார்பில் இன்று முதல் நலத்திட்ட உதவி

ஈரோடு: ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பில், முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, இன்று முதல் மக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கப்படுகிறது. இதுகுறித்து அமைச்சரும், மாவட்ட செயலாளருமான முத்துசாமி விடுத்துள்ள அறிக்கை: முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, பிப்., ௧7 முதல் ஏப்.,17 வரை மாநகராட்சி வார்டு, ஊர் கிளை, பேரூராட்சி வார்டுகளில் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் கட்சி-யினர் அனைவரும் பங்கேற்க வேண்டும். சித்தோடு பேரூராட்-சியில் இன்றும், நசியனுார் பேரூராட்சியில், நாளையும் நலத்-திட்ட உதவி வழங்கப்படுகிறது. இவ்வாறு அறிக்கையில் தெரி-வித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ