வெல்பேர் டிரஸ்ட் அலுவலகம் திறப்பு
ஈரோடு, ஏப். ௨௫பெருந்துறை மக்கள் நலன் கருதி, பெருந்துறை வெல்பேர் டிரஸ்டின், டயாலிசிஸ் சிகிச்சை ஆலோசனை மைய திறப்பு விழா மற்றும் வாகன சேவை துவக்க விழா பெருந்துறையில் நடந்தது. அறக்கட்டளை தலைவர் சென்னியப்பன் தலைமை வகித்தார். செயலாளர் ஆண்டாள் சுப்பிரமணியம், ஒளிரும் ஈரோடு தலைவர் சின்னச்சாமி, இன்ப்ரா டெக்ஸ் சக்திவேல், விஜயமங்கலம் அருள்செல்வம் முன்னிலை வகுத்தனர். இணை செயலாளர் செந்தில்முருகன் வரவேற்றார். ஈரோடு சக்தி மசாலா நிறுவன நிர்வாக இயக்குனர் துரைசாமி, அறக்கட்டளை அலுவலகத்தை திறந்து வைத்து பேசினார். சாந்தி துரைசாமி குத்து விளக்கேற்றினார். ஈரோடு காவேரி அரிமா சங்க அறக்கட்டளை சேர்மன் கல்யாணசுந்தரம், சக்தி மசாலா நிறுவனம் வழங்கிய குளிர் சாதன வசதியுடன் கூடிய வாகன சேவையை துவக்கி வைத்து பேசினார். பொருளாளர் சேப்டி சவுந்திரராஜன் நன்றி கூறினார். விழாவில் சர்வ கட்சியினர், பொது நல அமைப்பு நிர்வாகிகள், தொழிலதிபர்கள், டிரஸ்ட் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.