மேலும் செய்திகள்
ராசிபுரம், சேந்தமங்கலம் பகுதியில் கனமழை
01-Aug-2025
ஈரோடு, ஈரோடு மாநகரில், நேற்று காலை வெயிலின் தாக்கம் மிதமாக இருந்தது. மாலை 4:00 மணிக்கு லேசான துாறல் பொழிந்து நின்றது. 5:00 மணிக்கு மிதமான வேகத்தில் மழை பெய்ய துவங்கியது. பன்னீர்செல்வம் பார்க், வீரப்பன்சத்திரம், மணிக்கூண்டு, நசியனுார் ரோடு, கருங்கல்பாளைம் என பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது. சிறிது நேரம் இடைவெளி விட்டு விட்டு, 2 மணி நேரத்திற்கு மழை பெய்தது. மாலை நேரம் என்பதால், பள்ளி, கல்லுாரி முடிந்து சென்ற மாணவ, மாணவியர், வேலைக்கு சென்று வீடு திரும்பிய ஊழியர்கள் மழையில் நனைந்தவாறும், சிலர் குடை பிடித்தபடியும் சென்றனர். இதேபோல், சாலையில் சென்ற வாகன ஓட்டிகள், முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனர். இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது.சாலையோரத்தில் மாலை நேர வியாபாரத்திற்காக போடப்பட்டிருந்த காய்கறி கடைகள், ஜவுளி கடைகளில் வியாபாரம் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து குளிர்ந்த காற்று வீசியதால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.* அந்தியூர் அருகேயுள்ள புதுப்பாளையம், சுமைதாங்கி, சங்கராப்பாளையம், குருநாதபுரம், மந்தை, புதுமாரியம்மன் கோவில், சமத்துவபுரம் உள்ளிட்ட பல இடங்களில் நேற்று மாலை 4:00 மணிக்கு துவங்கி, அரை மணி நேரம் துாறல் மழை பெய்தது.* பவானி அருகே தளவாய்பேட்டை, ஒரிச்சேரி, புன்னம், பெரியமோளபாளையம், வைரமங்கலம் பகுதிகளில் மாலை, 4:30 மணியளவில் லேசான சாரல் மழை பெய்தது. 5:15 மணி வரை மழை நீடித்ததால் இதமான சூழல் நிலவியது.
01-Aug-2025