உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கணவனை கத்தியால் குத்தி மிரட்டல்; மனைவி கைது

கணவனை கத்தியால் குத்தி மிரட்டல்; மனைவி கைது

ஈரோடு, ஈரோடு, கனிராவுத்தர்குளம் வேலா நகரை சேர்ந்தவர் சண்முகம், 32, கூலி தொழிலாளி. 10 ஆண்டுகளுக்கு முன் ரோஸி என்ற பெண்ணை திருமணம் செய்தார். கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்தனர். ஆறு மாதங்களுக்கு முன் திருநெல்வேலியை சேர்ந்த, ஏற்கனவே திருமணமாகி இரு குழந்தைகளுடன் வசித்த பார்வதி, 29, என்பவரை திருமணம் செய்தார். இவர்கள் சின்னவலசு பகுதியில் தனியாக குடியிருந்தனர். மதுவுக்கு அடிமையாகி பார்வதியுடன் தினமும் சண்முகம் சண்டையிட்டு வந்துள்ளார். கடந்த 29ம் தேதி இரவு, 11:30 மணிக்கு பார்வதியிடம் பணம் கேட்டு சண்முகம் அடித்துள்ளார்.ஆத்திரமடைந்த பார்வதி, காய்கறி வெட்டும் கத்தியால் சண்முகத்தின் இடதுபுற வயிறு, இடது மார்பு, வலது தோள்பட்டையில் குத்தி ரத்த காயம் ஏற்படுத்தினார். மேலும் இங்கிருந்து சென்று விடு. இல்லையென்றால் கத்தியால் குத்தி கொன்று விடுவேன் என மிரட்டியுள்ளார். இதில் பயந்த சண்முகம், தந்தை காளியப்பன் வீட்டுக்கு சென்று நடந்ததை கூறியுள்ளார். ஈரோடு அரசு மருத்துவமனையில் சண்மும் சிகிச்சை பெற்று வருகிறார்.காளியப்பன் கொடுத்த புகார்படி, பார்வதி மீது வழக்குப்பதிந்த வீரப்பன்சத்திரம் போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். பின், நீதிமன்ற உத்தரவுப்படி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை