உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தனியார் பள்ளி பஸ் மோதி கணவர் கண் முன் மனைவி பலி

தனியார் பள்ளி பஸ் மோதி கணவர் கண் முன் மனைவி பலி

அந்தியூர், அந்தியூர் அருகே, தனியார் பள்ளி பஸ் மோதி, கணவர் கண் முன் மனைவி உயிரிழந்தார். அந்தியூர் அருகே பருவாச்சி காந்தி நகரை சேர்ந்த பழனிசாமி மனைவி சாந்தி, 45, கூலி தொழிலாளி. நேற்று மாலை 6:30 மணிக்கு இருவரும், அந்தியூரிலிருந்து அத்தாணி கள்ளிப்பட்டிக்கு, டி.வி.எஸ்., 50 மொபட்டில் சென்று கொண்டிருந்தனர். தாசாரியூர் காலனி அடுத்த பேக்கரி பேரிகார்டை கடந்து சென்றபோது, எதிரில் வந்த அந்தியூர் பவானி ரோட்டிலுள்ள தனியார் பள்ளி பஸ் மோதியது. இந்த விபத்தில், கீழே விழுந்த சாந்தி பஸ்சின் பின் சக்கரத்தில் சிக்கி கணவர் கண்முன்னே உயிரிழந்தார். லேசான காயத்துடன் பழனிசாமி உயிர் தப்பினார்.அந்தியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ