உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மனைவி மாயம்; கணவன் புகார்

மனைவி மாயம்; கணவன் புகார்

ஈரோடு, ஈரோடு வளையக்கார வீதியை சேர்ந்தவர் சந்திரன், 23; கால் டாக்சி டிரைவர். இவர் மனைவி முத்துமணி, 23; காதலித்த இருவரும் மூன்றாண்டுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். குழந்தைகள் இல்லை. வாமலை வீதியில் ஒரு டெக்ஸ்டைல்சில் முத்துமணி வேலை செய்கிறார். இந்நிலையில் திருச்சியில் உள்ள தாய் வீட்டுக்கு சென்ற முத்துமணி, சந்திரனை மொபைல்போனில் தொடர்பு கொண்டார். 'சேர்ந்து வாழ விருப்பமில்லை. நண்பர் கவினை திருமணம் திருமணம் செய்து கொண்டேன்' என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து சந்திரன் புகாரின்படி ஈரோடு டவுன் போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ