உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வரதட்சணையை எதிர்பார்த்து திருமணம் பகீர் கணவன் மீது மனைவி திடுக் புகார்

வரதட்சணையை எதிர்பார்த்து திருமணம் பகீர் கணவன் மீது மனைவி திடுக் புகார்

வரதட்சணையை எதிர்பார்த்து திருமணம்'பகீர்' கணவன் மீது மனைவி 'திடுக்' புகார்ஈரோடு, நவ. 16-ஈரோடு, கருங்கல்பாளையம், கமலா நகரை சேர்ந்தவர் மீனாட்சி, 37; ஈரோடு, எஸ்.பி., அலுவலகத்தில், இவர் நேற்று அளித்த புகாரில் கூறியிருப்பதாவது:எனக்கும், பெங்களுரை சேர்ந்த சதீஷ்குமார் என்பவருக்கும், 2023 மார்ச்சில் முறைப்படி திருமணம் நடந்தது. டயர் வியாபாரம் செய்வதாக கூறி, சதீஷ்குமார் திருமணம் செய்தார். திருமணத்தின்போது, 5.5 பவுன் நகை, 25,000 ரூபாய் ரொக்கம் தரப்பட்டது.திருமணத்துக்குப் பிறகு பெங்களூருவில் கணவர், அவரது மூத்த அக்கா, அவரது கணவர் ஆகியோருடன் கூட்டு குடும்பமாக வசித்தோம். கணவர் தினமும் இரவில், தாமதமாக வந்தார். இதுகுறித்து கேட்டபோது, வேலை இல்லை என்றும், சீட்டாடிவிட்டு வருவதும், கடன் இருப்பதும் தெரியவந்தது.இதையறிந்து எனது தாயார் கேட்டபோது, 'தனக்கு கடன் உள்ளது. திருமணத்தின்போது பெண் வீட்டில், 20 பவுன் நகை, 1 லட்சம் ரூபாய் ரொக்கம் தருவதாக என்னிடம் கூறினர்'. இதை நம்பி திருமணம் செய்தேன். நகை, பணத்தை வைத்து, எனது கடனை அடைக்க நினைத்தேன். அப்படி நடக்காததால், சீட்டாடி கடனை அடைக்க முயற்சி செய்கிறேன்' என கூறினார்.கடந்த ஆடி மாதம், ஈரோட்டில் எனது தாயார் வீட்டில் விட்டு சென்றவர், 20 பவுன் நகை, 1 லட்சம் ரூபாய் ரொக்கத்துடன் வர வேண்டும். அல்லது வர வேண்டாம் என்று, கணவரும், அவரது உறவினர்களும் பிரச்னை செய்கின்றனர். விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை