உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஸ்டார்ட் அப் நிறுவன உரிமையாளர்களுடன் காபி வித் கலெக்டர்

ஸ்டார்ட் அப் நிறுவன உரிமையாளர்களுடன் காபி வித் கலெக்டர்

ஈரோடு, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், 'காபி வித் கலெக்டர்' நிகழ்ச்சி, 'ஸ்டார்ட் அப் நிறுவன' உரிமையாளர்களுடன் நடந்தது. மாவட்டத்தில் தொழில் நுட்ப வளர்ச்சி மற்றும் தொழில் முனைவோர் சிந்தனையை ஊக்குவிக்கும் வகையில் கலெக்டர் கந்தசாமி, ஸ்டார்ட் அப் நிறுவன உரிமையாளர்களுடன் கலந்துரையாடினார். நிறுவனங்கள் சந்திக்கும் பிரச்னை, கோரிக்கை குறித்தும், விரிவாக்கத்துக்கான தேவை, அதற்கு அரசின் உதவி குறித்து கேட்டறிந்தார். மின்சார வாகனங்கள், ெஹல்த் டெக், ஏ.ஐ., தொழில் நுட்ப நிறுவனங்களின் புதுமையான தொழில் நுட்பங்கள், நுகர்வோர் சேவை, சந்தை வாய்ப்புக்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. திட்ட ஒருங்கிணைப்பாளர் (ஸ்டார்ட் அப்) குருசங்கர், கோபிநாத், உதவி இயக்குனர் (மாவட்ட தொழில் மையம்) ஜெகன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ