உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ரயில் மோதி பெண் பலி

ரயில் மோதி பெண் பலி

ஈரோடு:ஈரோடு மற்றும் காவிரி ரயில்வே ஸ்டேஷன் இடையே, தண்டவாள பகுதியில், ஒரு பெண் ரயில் மோதி இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி விசாரித்தனர். இதில் ஈரோடு, வி.வி.சி.ஆர் நகரை சேர்ந்த சின்னத்தம்பி மனைவி கோவிந்தம்மாள், 61, என தெரிந்தது. தண்டவாளத்தை கவனக்குறைவாக கடந்தபோது, ரயில் மோதி பலியானதாக, போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை