உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ரயில் மோதி பெண் பலி

ரயில் மோதி பெண் பலி

ஈரோடு:ஈரோடு வெண்டிபாளையம் கருணாகரன் மனைவி சாந்தா, 55; ஈரோடு ரயில்வேக்கு உட்பட்ட பகுதிகளில் துப்புரவு பணியை ஒப்பந்த முறையில் மேற்கொண்டார். உடல் நிலை பாதிப்பால் ஆறு மாதமாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். நேற்று அதிகாலை, 4:45 மணிக்கு முன்னதாக டீ குடிக்க வீட்டருகே செல்லும் தண்டவாளத்தை கடந்தபோது, ரயில் மோதி பலியானார். ஈரோடு ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை