பெண் தொழிலாளி பலி
அந்தியூர்:வெள்ளித்திருப்பூர் அருகேயுள்ள முரளி குடியிருப்பை சேர்ந்த சித்தன் மனைவி சத்யா, 45; கூலி தொழிலாளி. சனிச்சந்தை அடுத்த ஆலமரம் பஸ் நிறுத்தம் அருகில் நேற்று முன்தினம் இரவு, 9:30 மணிக்கு நடந்து சென்றார். அப்போது அடையாளம் தெரியாத நான்கு சக்கர வாகனம் மோதியதில் துாக்கி வீசப்பட்டார். சாலையில் விழுந்தவர் மீது அதே வாகனம் ஏறி சென்றதில் பலியானார். விபத்து ஏற்படுத்திய வாகனத்தை, அப்பகுதி சிசிடிவி 'கேமரா' காட்சிகளின் அடிப்படையில் வெள்ளித்திருப்பூர் போலீசார் தேடி வருகின்றனர்.