குழந்தைகளுடன்பெண் மாயம்
சத்தியமங்கலம், டிச. 19-சத்தியமங்கலம் அருகே, குழந்தைகளுடன் பெண் மாயமானார்.சத்தியமங்கலம் அடுத்த சிக்கரசம்பாளையத்தை சேர்ந்தவர் பன்னுசாமி. இவரது மனைவி நாகவேணி, 25. இவர்களுக்கு சக்கரவர்த்தினி, 5, சந்தனரூபினி, 5, என இரு மகள்கள் உள்ளனர். நாகவேணி கடந்த நவ., 19ம் தேதி தனது இரண்டு மகள்களுடன், சத்தியமங்கலம் சென்று வருவதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை. நேற்று முன்தினம் காணாமல் போன தனது மகள் மற்றும் பேத்திகள் இருவரை கண்டுபிடித்து தரக்கோரி, நாகவேணியின் தாய் சிவகாமி சத்தியமங்கலம் போலீசில் புகாரளித்தார்.