உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கோவிலுக்குள் செல்ல அனுமதி கோரி பெண்கள் போராட்டம்

கோவிலுக்குள் செல்ல அனுமதி கோரி பெண்கள் போராட்டம்

ஈரோடு: ஈரோடு பெரியார் நகரில் நுாற்றாண்டு பழமையான கருப்பண்ண சுவாமி கோவில் உள்ளது. கோவில் வளாகத்திலேயே ஓம்சக்தி கோவில் உள்ளது. கருப்பண்ண சுவாமி கோவிலில் கும்பாபிஷேக விழா நடத்த, திருப்பணி நடந்து வருகிறது. இதனால் கோவிலுக்குள் செல்ல முடியாத வகையில் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தடுப்பால் ஓம்சக்தி கோவிலுக்கு சென்று வழிபட முடியாத நிலை உள்ளது.வழிபட அனுமதிக்க கோரி, நுாற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், கருப்பண்ண சுவாமி கோவில் முன் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கோவில் விழாக்குழுவினர், பெண்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதுகுறித்து அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் அருகே, மண்டபம் அமைக்கும் பணி நடக்கிறது. பக்தர்கள் வந்தால், திருப்பணிக்கு இடையூறு ஏற்படும். அதனால்தான் கோவில் நுழைவு வாயிலில் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. திருப்பணி முடிந்த பின், ஆதிபராசக்தி கோவிலும் சீரமைக்கப்படும். இதற்கு பக்தர்கள் ஒத்துழைக்க வேண்டும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை