உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சென்னிமலை கோவில் மலைப்பாதை பணி மந்தம்

சென்னிமலை கோவில் மலைப்பாதை பணி மந்தம்

சென்னிமலை, சென்னிமலையில் மலை மீதுள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையை, 6.70 கோடி ரூபாய் மதிப்பில் சீரமைத்து, புதுப்பிக்கும் பணியை, ௨௦௨௪ ஜூலை, 24ம் தேதி, காணொலி காட்சியில் முதல்வர் தொடங்கி வைத்தார்.பணி தொடங்கி நடந்த நிலையில் வனத்துறையினரால் பணி நிறுத்தப்பட்டது. தற்போது படு மந்தமாக நடக்கிறது.இந்நிலையில் சென்னிமலை ஒன்றிய அ.தி.மு.க., செயலாளர் கோபாலகிருஷ்ணன், நகர செயலாளர் ரமேஷ் உள்பட ஏராளமானோர், கோவில் செயல் அலுவலர் சரவணனிடம் நேற்று மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது: மலைப்பாதை சீரமைப்பு பணியை விரைந்து முடிக்க வேண்டும். பக்தர்கள் படியேற முடியாமல் சிரமப் படுகின்றனர். படியேறியதில் இதுவரை இரண்டு உயிர் பலியாகி உள்ளது. இது முருக பக்தர்களுக்கு வேதனையான விஷயம். ஓராண்டாகியும், 70 சதவீத பணியே நடந்துள்ளது.இன்னும், 30 நாட்களுக்குள் முடிக்க வேண்டும். இல்லையேல் மாபெரும் போராட்டம் நடத்தப்படும். பணி முடியும் வரை பக்தர்கள் செல்ல கோவில் பஸ் இயக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர். பா.ஜ.,வினர் வருத்தம்இந்நிகழ்வுக்கு கூட்டணி கட்சியான தங்களை அழைக்காமல் சென்றதாக, பா.ஜ.,வினர் மத்தியில் வருத்தம் எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ