உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பெண்ணுக்கு டெங்கு பாதிப்பு பரவல் தடுப்பு பணி தீவிரம்

பெண்ணுக்கு டெங்கு பாதிப்பு பரவல் தடுப்பு பணி தீவிரம்

ஈரோடு, டிச. 27-ஈரோட்டில், பெண்ணுக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டதையடுத்து, நோய் தடுப்பு பணிகள் தீவிரம் அடைந்துள்ளது.ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், சமீபத்தில் நால்வருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு, ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில், ஈரோடு கே.ஆர்.பி. நகர் பகுதியில், 50 வயது பெண்ணுக்கு. உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில், ஈரோடு அரசு மருத்துவமனையில் ரத்த மாதிரி பரிசோதிக்கப்பட்டது. இதில் அவருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவரின் வீடு மற்றும் அப்பகுதியில் உள்ள குடியிருப்புகள், சாக்கடை கால்வாய்களை, மாநகர நல அலுவலர் கார்த்திகேயன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ