உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / டாஸ்மாக் பாரில் தகராறு தொழிலாளி அடித்துக்கொலை

டாஸ்மாக் பாரில் தகராறு தொழிலாளி அடித்துக்கொலை

தாராபுரம்:தாராபுரத்தில் டாஸ்மாக் பாரில் ஏற்பட்ட தகராறில், கூலி தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்டார்.தாராபுரம் தேவேந்திர தெருவை சேர்ந்த கூலி தொழிலாளி ஆறுமுகம், 60; பூக்கடை கார்னார் அருகே உள்ள டாஸ்மாக் பாருக்கு, அண்ணன் மகன் சுரேஷுடன், மது அருந்த நேற்று மதியம் சென்றார். அங்கிருந்த காமராஜபுரத்தை சேர்ந்த தமிழ்ராஜா, 23, ஆறுமுகத்திடம் தண்ணீர் கேட்டுள்ளார். தண்ணீர் இல்லை என்றதால் ஒயின்ஷாப் முன் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. மாலை 4:00 மணியளவில், என்.என்.பேட்டை வீதி வழியாக, ஆறுமுகமும், சுரேஷும் சென்றனர். அங்கு வந்த தமிழ்ராஜா, ஆறுமுகத்தை கீழே தள்ளி மிதித்துள்ளார். இதில் பின் தலையில் காயமடைந்த ஆறுமுகத்தை அங்கிருந்தவர்கள் மீட்டு, தாராபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக, தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை