மேலும் செய்திகள்
பாம்பு கடித்து பெண் பலி
01-Aug-2025
கோபி, கவுந்தப்பாடி அருகே, ஸ்கூட்டர் மீது கார் மோதிய விபத்தில், கட்டட தொழிலாளி பலியானார்.கவுந்தப்பாடி அருகே அய்யம்பாளையம் புதுாரை சேர்ந்தவர் வேலுசாமி, 61, கட்டட தொழிலாளி; இவர் தனது யமாகா ஸ்கூட்டரில், ஈரோடு சாலையை நேற்று காலை, 8:30 மணிக்கு கடக்க முயன்றார். அப்போது தஞ்சாவூரை சேர்ந்த ஆனந்த், 40, என்பவர் ஓட்டி வந்த சுவிப்ட் டிசையர் கார் மோதிய விபத்தில் வேலுசாமி பலத்த காயமடைந்தார். அவரை மீட்டு, கவுந்தப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இதுகுறித்து வேலுசாமி மனைவி செல்வி கொடுத்த புகார்படி, கவுந்தப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
01-Aug-2025