மேலும் செய்திகள்
சாலை தடுப்பில் பைக் மோதி கல்லுாரி மாணவர் பலி
30-Jul-2025
புன்செய்புளியம்பட்டி: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர்கள் தீபக், 22, உமர் பாருக், 21; நண்பர்களான இருவரும் பெரிய நாயக்கன்-பாளையத்தில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்தனர். யமஹா பேசினோ ஸ்கூட்டரில் சத்தி-புளியம்பட்டி சாலையில் நேற்று மாலை சென்றனர். நல்லுார் இரட்டை பாலம் மாதேஸ்வரன் கோவில் அருகே சென்ற-போது, எதிரே அதிவேகமாக வந்த டாரஸ் லாரி மோதியது. பைக்கில் சென்ற இருவரும் துாக்கி வீசப்பட்டனர். ஹெல்மெட் அணியாததால் தலையில் பலத்த காயமடைந்த தீபக் சம்பவ இடத்தில் பலியானார். பின்னால் அமர்ந்து சென்ற உமர் பாருக் பலத்த காயமடைந்தார். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த புன்செய் புளியம்பட்டி போலீசார், லாரி டிரைவர் பிரேம்குமாரிடம் விசாரிக்கின்றனர்.
30-Jul-2025