உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கீழ்பவானி வாய்க்காலில் குளித்த தொழிலாளி மாயம்

கீழ்பவானி வாய்க்காலில் குளித்த தொழிலாளி மாயம்

புன்செய்புளியம்பட்டி:கோவை, சுந்தராபுரம், சிட்கோ பகுதியை சேர்ந்தவர் ராஜேஸ், 36; சி.என்.சி., மெஷின் ஆப்பரேட்டர். உடன் பணிபுரியும் சக நண்பர்களுடன், பண்ணாரியம்மன் கோவிலுக்கு நேற்று காலை வந்தார். மாலையில் ஊருக்கு திரும்பினர். அப்போது தொப்பம்பாளையம் அருகே, கீழ்பவானி வாய்க்காலில் அனைவரும் குளித்தனர். தற்போது பாசனத்துக்காக, 2,300 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. நீச்சல் தெரியாத நிலையில் வாய்க்கால் நடுவே சென்ற ராஜேஷ் மூழ்கினார். அதிர்ச்சியடைந்த சக நண்பர்கள் கூக்குரலிட்டனர். சத்தம் கேட்டு சென்ற அக்கம்பக்கத்தினர் தேடியும் கிடைக்கவில்லை. சத்தியமங்கலம் தீயணைப்பு நிலைய வீரர்கள் தேடியும் கிடைக்கவில்லை. நீரில் மூழ்கி மாயமான ராஜேஷுக்கு மனைவி பிந்து, 32, இரண்டு வயதில் ஆண் குழந்தை உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி