உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தொழிலாளி படுகாயம் இருவர் மீது வழக்கு

தொழிலாளி படுகாயம் இருவர் மீது வழக்கு

ஈரோடு, டிச. 26-ஈரோடு, கள்ளுக்கடை மேடு ஜீவானந்தம் சாலை ஹவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் வரதராஜ், 39. கட்டட தொழிலாளி. கடந்த, 17ல், வீரப்பம்பாளையம் பிரிவு, ஸ்ரீ காமாட்சி பில்டிங் ஓனர் கட்டடத்துக்கு, சூரம்பட்டியை சேர்ந்த மேஸ்திரி சண்முகம், வேலைக்கு வரதராஜை அழைத்து சென்றார். அங்கு, 13 அடி உயரத்தில் சாரம் அமைத்து வரதராஜ் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது கால் தவறி கீழே விழுந்தார். இதில் தலையில் ரத்த காயம், வலது மார்பில் காயம் ஏற்பட்டது. ஈரோடு டிரஸ்ட் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். உரிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காத சண்முகம், ஓனர் வேலு மீது வழக்குப்பதிய வேண்டும் என, வீரப்பன்சத்திம் போலீசில் வரதராஜ் மனைவி மாலதி புகார் அளித்தார். அதன்படி, போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி