உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / துர்க்கை அம்மன் கோவிலில் அ.தி.மு.க., சார்பில் வழிபாடு

துர்க்கை அம்மன் கோவிலில் அ.தி.மு.க., சார்பில் வழிபாடு

பெருந்துறை, பெருந்துறை கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில், கட்சி பொது செயலாளர் பழனிசாமியின் 'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' சுற்றுப் பயணம் வெற்றிகரமாக நடக்கவும், 2026ல் முதல்வராகவும், பெருந்துறை ஒன்றியம் நல்லாம்பட்டி ஸ்ரீதுர்க்கை அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு, அபிஷேகம் மற்றும் 1,000 பேருக்கு அன்னதானம் வழங்கும் விழா நடந்தது. செயலாளர் அருள்ஜோதி செல்வராஜ் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ., ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளரும் எம்.எல்.ஏ.,வுமான கருப்பணன் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.பெருந்துறை வடக்கு ஒன்றிய செயலாளர் ரஞ்சித் ராஜ், பெருந்துறை நகராட்சி கவுன்சிலர் வளர்மதி செல்வராஜ், கஞ்சிக்கோவில் நகர செயலாளர் சிவசுப்ரமணியம், நல்லாம்பட்டி நகர செயலாளர் துரைசாமி, ஒன்றிய ஐ.டி., விங் செயலாளர் சந்தோஷ் குமார் உட்படபலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை