கால்நடைகளுக்கு பூஜை செய்து வழிபாடு
அந்தியூர்: கால்நடைகளை கவுரவிக்கும் விதமாக, நேற்று மாட்டு பொங்கல் கொண்டாடப்பட்டது. அந்த வகையில், அந்தியூர் அடுத்த அத்தாணி, கீழ்வாணி, சென்னிமலை கவுண்டன் புதுார், கூத்தம்பூண்டி ஆகிய பகுதிகளில் உள்ள கால்நடைகளை, பவானி ஆற்றில் குளிப்பாட்டினர். பின்னர், மாடுகளின் கொம்புகளுக்கு வர்ணம் பூசினர். இதையடுத்து மஞ்சள், கரும்புடன் பொங்கல் வைத்து வழிபட்டனர்.