உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கொங்கு பள்ளியில் யோகா தினம்

கொங்கு பள்ளியில் யோகா தினம்

பெருந்துறை : பெருந்துறை, கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், சர்வதேச யோகா தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. பள்ளித் தலைவர் யசோதரன் தலைமை வகித்தார். பள்ளி தாளாளர் சென்னியப்பன் முன்னிலை வகித்தார். முதல்வர் முத்துசுப்பிரமணியம் வரவேற்றார்.பெருந்துறை நந்தா இயற்கை மற்றும் யோகா மருத்துவ கல்லுாரி பேராசியர் மற்றும் மாணவர் வழிகாட்டுதலில், பள்ளியின் ஐந்தாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான, 900 மாணவர்கள் ஒன்றிணைந்து அன்றாட வாழ்வுக்கான ஆசனங்களை செய்தனர். பள்ளி துணைத்தலைவர் குமாரசாமி, பொருளாளர் சுப்பிரமணியன், இணை செயலாளர் முத்துராமலிங்கம், நிர்வாகிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். யோகா பயிற்றுனர் தனலட்சுமி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை