உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / இளம்பெண் விபரீத முடிவு

இளம்பெண் விபரீத முடிவு

கோபி, பவானி அருகே பெரிய தொட்டிபாளையத்தை சேர்ந்தவர் ரேணுகா, 23; இவரின் கணவர் பொம்முசாமி. கணவருடன் ஏற்பட்ட சிறு பிரச்னையால், பத்து மாத பெண் குழந்தையுடன், கவுந்தப்பாடி அருகே ஆலத்துாரில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு கடந்த, 9ம் தேதி சென்றார். கடந்த, 13ம் தேதி ரேணுகாவை அழைக்க, பொம்முசாமி சென்றார்.அப்போது பொம்முசாமியிடம், 'உங்கள் மீது இருந்த கோபத்தில், 10ம் தேதி இரவு எலி பேஸ்ட்டை தின்று விட்டேன்' என்று தெரிவித்துள்ளார். அதிர்ச்சி அடைந்த பொம்முசாமி, ஈரோட்டில் தனியார் மருத்துவமனையில் மனைவியை சேர்த்தார். மேல் சிகிச்சைக்காக பெருந்துறை மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் நேற்று முன்தினம் இறந்தார். ரேணுகாவின் தாய் ஜானகி புகாரின்படி, கவுந்தப்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை