மேலும் செய்திகள்
குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
24-Apr-2025
ஈரோடு, கஞ்சா பதுக்கி வைத்திருந்ததாக, சத்தியமங்கலம், கே.என்.பாளையம் அம்மன் நகரை சேர்ந்த மாதேஷை, 29, கோபி மதுவிலக்கு போலீசார், கடந்த மாதம், 22ல் கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தனர். மாதேஷ் தொடர்ந்து சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதால், அவரை குண்டர் சட்டத்தில் அடைக்க, எஸ்.பி., சுஜாதா வாயிலாக கலெக்டருக்கு, மதுவிலக்கு போலீசார் பரிந்துரைத்தனர். கலெக்டர் ராஜகோபால் சுன்கரா ஏற்றதால், மாதேஷ் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இதற்கான உத்தரவு நகல் அவரிடம் வழங்கப்பட்டது.
24-Apr-2025