உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / குட்காவுடன் வாலிபர் கைது

குட்காவுடன் வாலிபர் கைது

ஈரோடு:நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆவரங்காடு முனியப்பன் கோவில் வீதியை சேர்ந்தவர் ராஜகோபால், 38; டீக்கடையில் வேலை செய்கிறார். காலிங்கராயன் வாய்க்கால் கரையில் காவிரி சாலையோரம் சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்றிருந்தார். ரோந்து சென்ற கருங்கல்பாளையம் போலீசார் பிடித்து விசாரித்தனர். அவரிடம் அரசால் தடை செய்யப்பட்ட, 7 கிலோ குட்கா (ஹான்ஸ் 135 பாக்கெட், கூல் லீப் 48 பாக்கெட், விமல் பான்மசாலா 1,410 பாக்கெட், வி-1 புகையிலை 1,410 பாக்கெட்) பொருட்கள் இருந்தது. அவற்றை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை