உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பெண்ணுக்கு கத்திக்குத்து தம்பதி மீது வழக்கு

பெண்ணுக்கு கத்திக்குத்து தம்பதி மீது வழக்கு

திருக்கோவிலுார் : அரகண்டநல்லுார் அருகே பெண்ணை கத்தியால் குத்திய தம்பதி மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.அரகண்டநல்லுார் அடுத்த காடகனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ் மனைவி ரமிலாமேரி, 36; இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஜெயப்பிரகாஷ், 40; என்பவருக்கும் இடையே வீட்டுமனை தொடர்பாக 2 ஆண்டுகளாக முன்விரோதம் இருந்து வருகிறது. கடந்த 20ம் தேதி இது தொடர்பாக இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.ஆத்திரமடைந்த ஜெயப்பிரகாஷ் அவரது மனைவி வனிதா இருவரும் ரமிலாமேரியை திட்டி பேனா கத்தியால் குத்தினர்.காயமிடைந்த ரமிலாமேரி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.இது குறித்த புகாரின் பேரில் ஜெயப்பிரகாஷ், வனிதா ஆகிய இருவர் மீதும் அரகண்டநல்லுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை