உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பைக்கில் சென்ற வாலிபர் தவறி விழுந்து பலி

பைக்கில் சென்ற வாலிபர் தவறி விழுந்து பலி

மூங்கில்துறைப்பட்டு பைக்கில் சென்ற வாலிபர் தவறி விழுந்து இறந்தார். மூங்கில்துறைப்பட்டு அடுத்த வடகீரனுாரை சேர்ந்த ஷர்புதீன் மகன் அமருல்லா, 25; இவரது நண்பர் இம்ரான், 28; இருவரும் மூங்கில்துறைப்பட்டில் உள்ள பிஸ்கெட் ஏஜென்சிஸ் கம்பெனியில் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் நேற்று முன்தினம் இரவு வேலையை முடித்துவிட்டு இரவு 2 மணியளவில் பைக்கில் மேல்சிறுவளூர் செல்லும் போது நிலை தடுமாறி கீழே விழுந்தனர். இதில் பலத்த காயமடைந்த அமருல்லா சம்பவ இடத்திலேயே இறந்தார். இம்ரான் கள்ளக்குறிச்சி அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து வடபொன்பரப்பி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்துவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ