உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மண் பரிசோதனை அடிப்படையில் உரம் விவசாயிகளுக்கு வேளாண் துறை அறிவுரை

மண் பரிசோதனை அடிப்படையில் உரம் விவசாயிகளுக்கு வேளாண் துறை அறிவுரை

கள்ளக்குறிச்சி, : மண் பரிசோதனை அடிப்படையில்தான் உரம் இட வேண்டும் என விவசாயிகளுக்கு வேளாண் இணை இயக்குனர் அசோக்குமார் அறிவுறுத்தியுள்ளார்.அவரது செய்திக்குறிப்பு:கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகள் மண் பரிசோதனை அடிப்படையில் வயல்களில் உரமிடுவதால், தேவைக்கு அதிகமாக ஏற்படும் உரச்செலவினை குறைக்கலாம்.ஒவ்வொரு மண் வகைகளிலும் அதன் தன்மைக்கேற்ப ஊட்டச்சத்து மற்றும் நுண்ணுாட்ட சத்துகள் பயிர்களுக்கு கிடைக்கிறது. இந்த சத்துகள் மண்ணில் எந்த அளவு உள்ளது என்பதை தெரிந்து கொள்வதற்கு மண்பரிசோதனை செய்ய வேண்டும்.எனவே விவசாயிகள் மண் பரிசோதனை நிலையத்தில் 30 ரூபாய் செலுத்தி தங்கள் மண்ணை பரிசோதனை செய்து மண்ணில் உள்ள பேரூட்ட மற்றும் நுண்ணுாட்ட சத்துகளின் வளத்திற்கு ஏற்ப பயிர்களுக்கு தழை, மணி, சாம்பல் சத்து மற்றும் நுண்ணுாட்ட சத்துகள் இட வேண்டும்.இதன் மூலம் உரச்செலவு குறைவதோடு மண்ணின் வளத்தைப் பெருக்கி அதிக மகசூல் பெறலாம். அதுமட்டுமன்றி விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் பாசனத்திற்கு பயன்படுத்தும் நீரின் தன்மையையும் பரிசோதனை நிலையத்தில் 30 ரூபாய் செலுத்தி அறிந்து கொள்ளலாம்.விவசாயிகள் தங்கள் மண்ணின் வளத்தை அதிகரிக்க உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா, ரைசோபியம் மற்றும் நெல், சிறுதானியம், பயறு வகைகள், வேர்க்கடலை, கரும்பு மற்றும் தென்னைக்கான நுண்ணுாட்ட உரங்களை வேளாண்மை விரிவாக்க மையங்களில் மானிய விலையில் பெற்று இடுவதன் மூலம் கூடுதல் மகசூல் பெறலாம்.எனவே, கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகள் அனைவரும் சின்னசேலம் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் இயங்கிவரும் மண்பரிசோதனை நிலையத்தில் தங்கள் நிலத்தின் மண் மற்றும் பாசன நீர் மாதிரிகளை பரிசோதனை செய்து பயனடைய வேண்டும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ