உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / டி.ஏ.பி.,க்கு மாற்றாக சூப்பர் பாஸ்பேட் வேளாண் துறை பரிந்துரை

டி.ஏ.பி.,க்கு மாற்றாக சூப்பர் பாஸ்பேட் வேளாண் துறை பரிந்துரை

கள்ளக்குறிச்சி : மண்ணில் உப்பு நிலையை அதிகரிக்கும் டி.ஏ.பி., உரத்திற்கு பதில் சூப்பர் பாஸ்பேட் காம்ப்ளக்ஸ் உரங்களை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டது. இதுகுறித்து மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் அசோக்குமார் செய்திக்குறிப்பு:கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் தனியார் உர நிறுவன நிலையங்களில் யூரியா 7,303 டன், டி.ஏ.பி., 1,231 டன், பொட்டாஷ் 1,526 டன், சூப்பர் பாஸ்பேட் 1,325 டன் மற்றும் காம்ப்ளக்ஸ் 10,790 டன் இருப்பு வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது.விவசாயிகள் பயிர் சாகுபடிக்கு டி.ஏ.பி., உரத்திற்கு மாற்றாக சூப்பர் பாஸ்பேட் உரம், காம்ப்ளக்ஸ் உரங்களை பயன்படுத்தலாம். சூப்பர் பாஸ்பேட் உரத்தில் பயிர்களுக்கு தேவையான பாஸ்பரஸ், சல்பர், கால்சியம் போன்ற கூடுதல் சத்துக்கள் அடங்கியுள்ளன. எண்ணெய் வித்துப் பயிர்களில் அதிக மகசூல் தருகிறது. மண்ணில் டி.ஏ.பி., உரம் ஏற்படுத்தும் உப்பு நிலையை விட சூப்பர் பாஸ்பேட் குறைவாகவே ஏற்படுகிறது. பயிர்களுக்கு டி.ஏ.பி., மட்டும் பயன்படுத்தாமல் தழை, மணி, சாம்பல் சத்துக்கள் கொண்ட காம்ப்ளக்ஸ் மற்றும் சூப்பர் பாஸ்பேட் உரங்களையும் பயன்படுத்தலாம். தனியார் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு விற்பனை நிலையங்களில் அரசு நிர்ணயித்த விலையில் மட்டும் விற்பனை முனைய கருவி மூலம் விவசாயிகளுக்கு விநியோகம் செய்திட வேண்டும் என, மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை