உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கிணற்றில் தவறி விழுந்த முதியவர் பலி

கிணற்றில் தவறி விழுந்த முதியவர் பலி

ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அருகே கிணற்றில் தவறி விழுந்த முதியவர் உயிரிழந்தார்.ரிஷிவந்தியம் அடுத்த பல்லவாடி கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் மகன் முருகேசன்,80; இவர், நேற்று காலை 8 மணியளவில் விளைநில கிணற்றில் உள்ள மரங்களை வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக முருகேசன் 120 அடி ஆழம் கொண்ட கிணற்றினுள் தவறி விழுந்தார். தகவலறிந்த ரிஷிவந்தியம் தீயணைப்பு நிலைய அலுவலர் சங்கர்(பொ) தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று, கிணற்றில் இறந்து கிடந்த முருகேசனின் உடலை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக முருகேசனின் உடல் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்த புகாரின் பேரில் ரிஷிவந்தியம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !