உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / இரு தரப்பு பிரச்னை திருவிழா நடத்த தடை

இரு தரப்பு பிரச்னை திருவிழா நடத்த தடை

சங்கராபுரம்: அரசம்பட்டு கிராமத்தில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக பங்குனி உத்திர திருவிழா நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.சங்கராபுரம் அடுத்த அரசம்பட்டு கிராமத்தில் பாலதண்டாயுதபாணி கோவில் உள்ளது. தனியாருக்கு சொந்தமான இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா நடைபெறும். இந்த ஆண்டு திருவிழா நடத்துவது தொடர்பாக இரு சமூகத்தினரிடையே பிரச்னை எழுந்தது.இது தொடர்பாக தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் கோபாலகிருஷ்ணன் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. கூட்டத்தில் உடன்பாடு ஏற்படவில்லை.இதனால் ஆர்.டி.ஓ., தலைமையில் சமாதான கூட்டம் நடைபெற இருந்த நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இதன் காரணமாக இந்த ஆண்டு நடைபெற இருந்த பங்குனி உத்திர திருவிழா நடத்த தாசில்தார் தடை விதித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ