உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / காலை உணவு திட்டம்: சேர்மன் துவக்கி வைப்பு

காலை உணவு திட்டம்: சேர்மன் துவக்கி வைப்பு

கள்ளக்குறிச்சி: மேல்நாரியப்பனுார் புனித அந்தோணியார் துவக்கப் பள்ளியில் காலை உணவு திட்டம் துவங்கியது.சின்னசேலம் அடுத்த மேல்நாரியப்பனுார் புனித அந்தோணியார் துவக்கப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு, சேர்மன்சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் சுதா மணிகண்டன், ஊராட்சி தலைவர் தனலட்சுமி முன்னிலைவகித்தனர். தலைமை ஆசிரியர் நிர்மலா வரவேற்றார்.நிகழ்ச்சியில், முதல்வரின் காலை உணவு திட்டம் அரசு நிதியுதவிபெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டதையடுத்து, மாணவர்களுக்கு வெண் பொங்கல், இனிப்பு பொங்கல்,காய்கறியுடன் கூடிய சாம்பார் வழங்கப்பட்டது. தொடர்ந்து, சேர்மன் சத்தியமூர்த்தி மாணவர்களுடன் அமர்ந்துசாப்பிட்டார். வட்டார கல்வி அலுவலர் தனபால், மகளிர் திட்ட வட்டார ஒருங்கிணைப்பாளர் சக்திவேல்,வட்டார அலுவலர் சுமதி, தி.மு.க., கிளைச் செயலாளர்கள் வரதன், முருகன், மாவட்ட பிரதிநிதிகள் முருகேசன்,பெரியசாமி உட்பட ஆசிரியர்கள், பெற்றோர்கள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி