மேலும் செய்திகள்
நாளைய மின்தடை (23.12.2025)
22-Dec-2025
ஆர்.கே.எஸ்., பள்ளியில் நாற்பெரும் விழா
22-Dec-2025
நாளைய மின்தடை கள்ளக்குறிச்சி
22-Dec-2025
இந்து முன்னணி மோட்ச தீபம் ஏற்றி அஞ்சலி
22-Dec-2025
உளுந்துார்பேட்டை:உளுந்துார்பேட்டை அருகே மரத்தில் கார் மோதியதில் தாய், மகன் பரிதாபமாக இறந்தனர். எட்டு பேர் காயமடைந்தனர்.காஞ்சிபுரம் மாவட்டம், பொன்னேரி காரப்பேட்டை, சத்யா நகரைச் சேர்ந்தவர் தனபால். காஞ்சிபுரம் தாலுகா போலீஸ் ஸ்டேஷனில் சப் - இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த இவர், 2019ல் இறந்தார். இவருக்கு ஐந்தாம் ஆண்டு திதி கொடுக்க அவரது மனைவி பிருந்தா, 60, மகன் சிவஜோதி, 30, மற்றும் குடும்பத்தினர் உட்பட 10 பேர் ராமேஸ்வரம் சென்றனர்.அங்கு திதி கொடுத்து விட்டு, நேற்று முன்தினம் இரவு, 'மாருதி எக்கோ' காரில் காஞ்சிபுரத்திற்கு புறப்பட்டனர். நேற்று அதிகாலை 4:45 மணிக்கு கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த ஷேக்உஷேன்பேட்டை அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் இருந்த மரத்தில் மோதியது.காரை ஓட்டி வந்த சிவஜோதி மற்றும் அவரது தாய் பிருந்தா சம்பவ இடத்திலேயே இறந்தனர். காரில் பயணித்த சிவஜோதியின் உறவினர்கள் எட்டு பேர் படுகாயமடைந்தனர்.அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு, உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி அளித்தபின், மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.காரின் இடிபாட்டில் சிக்கி இறந்த சிவஜோதி, பிருந்தா ஆகியோரை உளுந்துார்பேட்டை தீயணைப்பு துறையினர் கிரேன் உதவியுடன் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பினர். எடைக்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.
22-Dec-2025
22-Dec-2025
22-Dec-2025
22-Dec-2025