உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சிக் ஷா கேந்திரா மாணவர்கள் சிலம்பம் போட்டியில் சாதனை

சிக் ஷா கேந்திரா மாணவர்கள் சிலம்பம் போட்டியில் சாதனை

திருக்கோவிலுார் : தேசிய அளவில் நடந்த சிலம்பம் போட்டியில் திருக்கோவிலுார் சிக் ஷா கேந்திரா பள்ளி மாணவர்கள் பதக்கங்களைப் பெற்று சாதனை படைத்தனர். அகில இந்திய சிலம்பம் கூட்டமைப்பு சார்பில் 20 வது தேசிய சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டி கன்னியாகுமரியில் நடந்தது. இதில் திருக்கோவிலுார் சிக் ஷா கேந்திரா பள்ளி மாணவர்கள் பல்வேறு பிரிவுகளின் கீழ் நடந்த போட்டியில் கலந்து கொண்டனர். இதில் ஏழு பேர் தங்கம், மூன்று பேர் வெள்ளி, 10 பேர் வெங்கள பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி வளாகத்தில் பாராட்டு விழா நடந்தது. பள்ளியின் தலைவர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார்.செயலாளர் செந்தில், தாளாளர் அஸ்வின் பாலாஜி வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டி பேசினர். நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். பள்ளி முதல்வர் ராஜேஷ் சர்மா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ