உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / துாய்மையே சேவை சிறப்பு திட்டம் மனித சங்கிலி விழிப்புணர்வு நிகழ்ச்சி

துாய்மையே சேவை சிறப்பு திட்டம் மனித சங்கிலி விழிப்புணர்வு நிகழ்ச்சி

கள்ளக்குறிச்சி கள்ளக்குறிச்சி நகராட்சியில் துாய்மையே சேவை சிறப்பு திட்டம் குறித்து மனித சங்கிலி மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.கள்ளக்குறிச்சி நகராட்சியில் துாய்மையே சேவை-2024 என்ற திட்டத்தின்கீழ் மனிதச்சங்கிலி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நான்குமுனை சந்திப்பு பகுதியில் நடந்த நிகழ்ச்சிக்கு நகரமன்ற சேர்மன் சுப்ராயலு தலைமை தாங்கினார். நகரமன்ற துணை சேர்மன் ஷமீம்பானு அப்துல்ரசாக், நகராட்சி ஆணையாளர் மகாலட்சுமி முன்னிலை வகித்தார்.இந்நிகழ்ச்சியில் தேவராஜ் உள்ளிட்ட நகரமன்ற உறுப்பினர்கள், அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் செல்வகுமார், மார்கெட் சங்க செயலாளர் ராஜா, நண்பர்கள் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாகி குமரேசன், ஜூனியர் சேம்பர் இண்டர்நேஷனல் சங்க தலைவர் பாலாஜி, செயலாளர் மதி உள்ளிட்ட நகராட்சி அலுவலக பணியாளர்கள், துாய்மைபணியாளர்கள் என 250க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு மனித சங்கிலி அமைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.மேலும், நிகழ்ச்சியில் துாய்மைக்கான உறுதிமொழி ஏற்கப்பட்டது.நகராட்சி பகுதிகளில் நேற்று முதல் முதல் வரும் ஆக.2-ம் தேதி வரை அதிகமாக குப்பைகளை தெருவில் கொட்டப்படும் வார்டுக்கு 2 இடங்கள் என மொத்தம் 42 இடங்கள் தேர்வு செய்து இப்பகுதிகளில் குப்பைகள் கொட்டப்படாதவாறு தடுப்பு ஏற்படுத்திட வேண்டும். , ஒட்டுமொத்த துாய்மை பணியில் ஈடுபடவேண்டும்.பள்ளிக்குழந்தைகளுக்கு விழிப்புணர்வு மற்றும் கால்வாய்கள் சுத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள உறுதிமொழி ஏற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை