உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மினி பஸ் உரிமையாளர்களுடன் கலெக்டர் ஆலோசனை

மினி பஸ் உரிமையாளர்களுடன் கலெக்டர் ஆலோசனை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மினி பஸ் உரிமையாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.மாவட்டத்தில் கண்டறியப்பட்டுள்ள புதிய மினி பஸ் இயக்கத்திற்கான புதிய வழித்தட விபரம் மற்றும் வழித்தடங்களின் எண்ணிக்கை குறித்து, வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.கூட்டத்தில், புதிதாக வரப்பெற்றுள்ள விண்ணப்பங்கள் மற்றும் மினி பஸ் உரிமையாளர்களின் கருத்துகள், ஆலோசனை கேட்கப்பட்டது.கள்ளக்குறிச்சி மற்றும் உளுந்துார்பேட்டை வட்டார போக்குவரத்து அலுவலக எல்லைக்குட்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து கண்டறியப்பட்ட வழித்தட விபரங்கள், மினி பஸ் உரிமையாளர்களிடம் எடுத்துக்கூறி, பஸ்களை இயக்குவதற்கு விண்ணப்பம் வழங்க அறிவுறுத்தப்பட்டது.மேலும், கூடுதல் தகவல்களுக்கு சம்மந்தப்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலரை அணுக வேண்டும் என உரிமையாளர்களுக்கும், அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் பஸ்களை இயக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை