உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ஓட்டு எண்ணும் மைய கண்காணிப்பு பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு

ஓட்டு எண்ணும் மைய கண்காணிப்பு பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி ஓட்டு எண்ணும் மையத்தில் கண்காணிப்பு பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார். கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதிக்கான ஓட்டு எண்ணும் மையம் சின்னசேலம் மகாபாரதி பொறியியல் கல்லுாரியில் அமைக்கப்பட்டுள்ளது. லோக்சபா தொகுதிக்குட்பட்ட 6 சட்டசபை தொகுதியின் மின்னணு ஓட்டு பதிவு இயந்திரங்கள் தொகுதி வாரியாக தனி தனியாக வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது.தொடர்ந்து ஸ்ட்ராங் ரூம்கள் பகுதியில் துப்பாக்கி ஏந்திய மத்திய ராணுவ படை போலீசார் மற்றும் வளாகத்தை சுற்றிலும் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சீல் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூம்கள் மற்றும் ஓட்டு எண்ணும் மையம் முழுவதும் சிசிடிவி கேமிராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஓட்டு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கண்காணிப்பு பணிகளை கலெக்டர் ஷ்ரவன்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து பார்வையாளர் வருகை பதிவேட்டில் கையொப்பமிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை