உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பா.ஜ., தலைவரை கண்டித்து காங்., ஆர்ப்பாட்டம் 

பா.ஜ., தலைவரை கண்டித்து காங்., ஆர்ப்பாட்டம் 

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் பா.ஜ., மாநில தலைவரை கண்டித்து காங்., வழக்கறிஞரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, காங்., வழக்கறிஞரணி மாவட்ட தலைவர் ராஜ்மோகன் தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்தமிழ் கண்ணன் முன்னிலை வகித்தார்.தமிழக காங்., மாநில தலைவர் செல்வபெருந்தகையை அவதுாறாக பேசிய பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், மாநில பொதுக்குழு உறுப்பினர் இளைய பெருமாள், இளைஞர் காங்., மாவட்ட தலைவர் ஆண்டனி ரோஸ்லின், மாவட்ட செயலாளர் கோவிந்தராசு, ஐ.என்.டி.யு.சி. மாவட்ட தலைவர் செல்வராஜ், மாவட்ட மீனவரணி தலைவர் ராஜி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ